மக்களே.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீங்க.. வெங்கையா நாயுடு அறிவுரை
Recommended Video
குண்டூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.இந்த கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு நான் 16 இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசுவேன். இப்போது நான் மதிக்கத்தக்க பதவியில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகிவிட்டேன்.
இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை நம்புங்கள், அதாவது நிஜ தேர்தல் முடிவுகளை நம்புங்கள். தேர்தல்களில் சாதி , மதம் பார்த்து சீட் கொடுப்பது கவலையளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள்" இவ்வாறு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications