'கட்டிங்'கை விடுங்க.. 'கராத்தே' கத்துக்கங்க.. தொண்டர்களுக்கு சிபிஎம் அட்வைஸ்!!
பாலக்காடு: கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் மது பழக்கத்தைக் கைவிட வேண்டும், மத ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்பதுடன் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் கட்சி கொள்கைக்கு ஏற்ப தொண்டர்கள் எப்படி தங்களது வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான 62 பக்க அறிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் மீது நேற்று முதல் விவாதம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக கட்சி தொண்டர்கள் மது பழக்கத்தைக் கைவிட வேண்டும், மத ரீதியான நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மத அடிப்படைவாத சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தற்காப்பு கலைகளையும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத், தொழிலாளர் வர்க்கத்துடன் கட்சித் தொண்டர்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல் கட்சியில் இருக்கும் கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications