இந்தியாவைக் காக்க 56 'இன்ச்' நெஞ்சு தேவையில்லை, பரந்த மனது போதும் - மோடிக்கு பிரியங்கா 'கொட்டு'!
ரேபரேலி: இந்தியாவை வழி நடத்த அகன்று பறந்து விரிந்த 56 இன்ச் மார்பு தேவை என்று கூறுகிறார் நரேந்திர மோடி. ஆனால் அது தேவையில்லை, பெரிய மனதுதான் தேவை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
கோரக்பூரில் நடந்த பிரசாரம் ஒன்றில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குஜராத்தை போல உத்தரபிரதேசத்தை மாற்ற விடமாட்டோம் என்கிறார். அவ்வாறு குஜராத்தை போல மாற்றுவது என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா?

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம். வருடத்தின் 365 நாட்களும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், தெருக்களிலும் மின்வெட்டு இல்லாத நிலை. இதுதான் குஜராத்தை போல மாற்றுவது. அதை முலாயம் சிங்கால் செய்ய முடியாது. அந்த தைரியம் அவருக்கு கிடையாது. அதற்கு 56 இன்ச் மார்பு வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். ரேபரேலி தொகுதியில் தனது தாயாருக்கு ஆதரவு திரட்டி அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டை வழிநடத்த 56 இன்ச் மார்பு தேவையில்லை, பெரிய மனசுதான் தேவை. நாடு தற்போதுள்ள சூழ்நிலையில், விரிந்த மார்பு கொண்ட ஒரு தலைவர் தேவையில்லை. பரந்த இதயம் கொண்ட ஒருவரே பிரதமராக வேண்டும்.
இந்த மாபெரும் நாட்டை வழி நடத்த பெரும் பலம் தேவையில்லை. மாறாக மன வலிமைதான் முக்கியம். இதுபோன்ற பலம்தான் நாட்டை வழி நடத்துமே தவிர உடல் பலம் தேவையில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications