தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் வேண்டாம்... ட்விட்டரில் சித்தராமையா
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை ஒருபோதும் மேற்கொள்ள கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும்,கன்னட அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்கும் வகையில் அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர்.
இதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு சாலையில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனிடையே சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
I appeal to Twitter users to not support any hate campaign. It is irresponsible and mischievous to support hate messages of any kind.
— CM of Karnataka (@CMofKarnataka) September 11, 2016
காவிரி தண்ணீரைக் கோரும் தமிழகத்தின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை கன்னடர்களோ, கன்னட அமைப்புகளோ ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications