பிரதமர் மோடியுடன் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்த டொனால்ட் டிரம்ப்
அகமதாபாத்: இந்தியா வருகை தரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் வரலாற்று சிறப்புமிக்க மகாத்மா காந்தியடிகளின் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்.
Recommended Video
வாஷிங்டனில் இருந்து இன்று நண்பகல் அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைகிறார் டொனால்ட் டிரம்ப். அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதியினரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிடுகிறார். முதலில் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறாரா? இல்லையா? என்பதில் குழப்பம் இருந்து வந்தது.
இது தொடர்பாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா கூறுகையில், முற்பகல் 11.30 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்துக்கு டிரம்ப் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு செல்ல இருக்கிறார்.
சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்ட பின்னர் இந்தியா பாலம் வழியாக மோதிரா விளையாட்டு மைதானத்துக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவுக்கு டிரம்ப் செல்கிறார் என்றார்.
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு சபர்மதி ஆசிரமத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராக உள்ளன. தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 1917-ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் மிக முக்கிய பங்கு வகித்தது.
அண்மையில் சீனா அதிபர் ஜின்பிங், ஜப்பான் பிரதமர் அபே உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக சபர்மதி ஆசிரமத்தின் செயலாளர் அம்ருத் மோடி கூறுகையில், இங்கு டிரம்ப் 15 நிமிடம் பார்வையிட உள்ளார். காந்தியடிகளின் ராட்டை குறித்து டிரம்ப்-க்கு விளக்கம் அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் போதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்படும் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications