Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணவு கிடையாது.. மகளை பார்க்க விடாமல் சித்ரவதை.. கர்நாடகா ஆளுநரின் வீட்டில் நடக்கும் வரதட்சணை கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பேரன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் செய்துள்ளார். ரூ.50 லட்சம் வரதட்சணை பணம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உணவு வழங்காமலும், மகளை பார்க்க விடாமலும் தடுத்துள்ளனர். அதோடு, மொட்டை மாடியில் இருந்து அவரை கீழே தள்ளி கொல்ல முயன்றதாக பரபரப்பான புகார் வழங்கப்பட்டுள்ளது திடுக்கிட வைத்துள்ளது.

கர்நாடகாவின் ஆளுநராக தாவர் சந்த் கெலாட் உள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவரது பேரன் பெயர் தேவேந்திர கெலாட். இவரது மனைவி பெயர் திவ்யா கெலாட். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

dowry-complaint-filed-against-grandson-of-karnataka-governors-thawar-chand-gehlot

இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2018 ஏப்ரல் 29 ம் தேதி திருமணம் நடந்தது. ரட்லம் மாவட்டம் தால் என்ற இடத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் தாவர்சந்த் கெலாட் மத்திய அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் தான் திவ்யா கெலாட் தனது கணவர் தேவேந்திர கெலாட் மீது மத்திய பிரதேசத்தின் ரட்லம் எஸ்பி அமித்குமாரிடம் புகாரளித்துள்ளார். அதில், ‛‛என் கணவர் தேவேந்திர கெலாட்டுக்கு இருக்கும் சில பழக்கங்களை மறைத்து என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என் கணவருக்கு மதுபானம் உள்பட பிற போதைப்பழக்கம் உள்ளது. அதோடு இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். இப்போது வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார்கள். என் தந்தை ரூ.50 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார் என்று என்னிடம் அதனை கேட்டு துன்புறுத்துகின்றனர். வரதட்சணை பணமாக ரூ.50 லட்சம் கேட்கின்றனர்.

நான் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். பலமுறை உணவு தராமல் துன்புறுத்தி உள்ளனர். மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளி கொல்லவும் முயன்றார். கடந்த 2025 ஜனவரி 26ம் தேதி குடிபோதையில் இதனை செய்தார். நான் கேலரி ஏரியாவில் விழுந்து முதுகு, இடுப்பு, தோள்பட்டையில் பலத்த காயமடைந்தேன். இரவில் என்னை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை. அதன்பிறகு இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு மறுநாள் காலையில் தான் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவ செலவை என் தந்தையை செலுத்தும்படி கூறினர்.

எனக்கு 4 வயதில் மகள் உள்ளார். அவளை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். நவம்பர் மாதம் என் மகளை பார்க்க பள்ளிக்கு சென்றேன். அப்போது என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. என் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வந்தால் மட்டும் தான் மகளை பார்க்க அனுமதிப்பதாக கூறி உள்ளனர்.
இதற்கு மாமனாரான, ஆலட் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜீதேந்திர கொலாட் மற்றும் குடும்பத்தினர் விஷால் கெலாட், அனிதா கெலாட் உள்ளிட்டவர்கள் உடந்தையாக இருக்கின்றனர்'' என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த இடம் உஜ்ஜைன் லிமிட்டுக்குள் வருகிறது. இதனால் உஜ்ஜைன் எஸ்பி மற்றும் உஜ்ஜைன் ஐஜியிடம் புகார் அளிக்க ரட்லம் எஸ்பி கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திவ்யா கெலாட்டின் மாமனார் ஜிதேந்திர கெலாட் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி, ‛‛குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். நான் மீடியாவிடம் உண்மையை பேசுவேன்'' என்று கூறி சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+