மருமகளை பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்.. கூடுதல் வரதட்சணை கேட்டு கொடூரம்
லக்னோ: வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து, பாம்பை அறைக்குள் விட்டு மாமியார் கடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
சமீபகாலமாக வரதட்சணை கொடுமைகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் தற்கொலை, கொலை என குற்றச் சம்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

பாம்பு கடி
இந்நிலையில், வரதட்சணை கொடுமையின் உச்சமாக உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து, பாம்பை அறைக்குள் விட்டு கடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை பிரச்சனை
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் ஷாநவாஸ், ரேஷ்மா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனதிலிருந்தே கணவர் குடும்பத்தினருக்கும், ரேஷ்மா குடும்பத்தினருக்கு வரட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
ஷாநவாஸின் குடும்பத்தினர் ரேஷ்மா வீட்டினரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளனர். அவர்களும் பணம் கேட்கும்போதெல்லாம் கொடுத்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரேஷ்மாவின் மாமியார் கூடுதல் வரதட்சணையாக ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். ரேஷ்மா வீட்டினர் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இதனால், ரேஷ்மாவின் மாமியார் கடும் கோபமடைந்துள்ளார். நான் கேட்டது 5 லட்சம் ஆனால் நீங்கள் 1.5 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர் என்று கூறி ரேஷ்மாவை அனுதினமும் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
மருமகளை கடித்த பாம்பு
இதனால், கடும் மன உளைச்சளுக்கு ஆளான ரேஷ்மா மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, அந்த அறைக்குள் ஒரு பாம்பையும் விட்டுள்ளார். பாம்பைப் பார்த்தவுடன் பதறிப்போன ரேஷ்மா அந்த அறையில் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடியுள்ளார். பாம்பு ரேஷ்மாவை கடித்ததில் அவர் அலறி துடித்துள்ளார்.
இதனைப் பார்த்து கைதட்டி சிரித்து மாமியார் சந்தோஷப்பட்டுள்ளார். தயவுசெய்து கதவைத் திறந்துவிடுங்கள் என்று ரேஷ்மா கெஞ்சியபோதும் அவரது மாமியார் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் வலியால் துடித்துப்போன ரேஷ்மா எப்படியோ முயற்சி செய்து தனது செல்போன் மூலமாக தனது சகோதரி ரிஸ்வானாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்ட சகோதரி
உடனடியாக ரிஸ்வானா தனது அக்கா வீட்டுக்கு வந்துள்ளார். ஷாநாவாஸின் குடும்பத்தினருடன் கடும் சண்டை போட்டுவிட்டு உடனடியாக தனது அக்காவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குறித்து ரிஸ்வானா காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ரேஷ்மாவின் கணவர் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications