சுனந்தா வழக்கில் தரூர் மீது குற்றம்சாட்டிய எய்ம்ஸ் டாக்டரிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் குப்தாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அண்மையில் அறிவித்தனர்.

சுனந்தாவின் உடலை டாக்டர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து மூன்று அறிக்கைகள் அளித்தன. கடந்த மாதம் 29ம் தேதி அளிக்கப்பட்ட அறிக்கையில் தான் சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் போலீசார் சுனந்தா வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
இந்நிலையில் துணை கமிஷனர் பி.எஸ். குஸ்வாஹ், இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு டாக்டர் குப்தாவிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அவரிடம் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அவருக்கு தரூர் அனுப்பிய இமெயில்கள் குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்ற தரூர் முயற்சி செய்வதாக முன்பு குப்தா தெரிவித்தார். பின்னர் தரூர் தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டார். இது பற்றியும் குப்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சுனந்தா இறந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தரூர் என்னென்ன செய்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications