1996ல் காதலனை கொன்று துண்டு துண்டாக வெட்டி தலைமறைவான டாக்டர் ஓமனா.. மலேசியாவில் தற்கொலை

விஷ ஊசி போட்டு காதலனைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள டாக்டர் ஓமனா மலேசியாவில் மரணமடைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கன்னூர்: காதலனை விஷ ஊசி போட்டுக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியான கேரள டாக்டர் ஓமனா மலேசியாவில் மரணமடைந்துள்ளார். மலேசியாவில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்ட புகைப்படம் மூலம் இது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள பையனூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஓமனா. இவர் கண்ணனூரைச் சேர்ந்த ஸ்டுடியோ அதிபரான முரளிதரன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்த போது தான் முரளிதரன் ஏற்கனவே திருமணமானவர் என்பது ஓமனாவுக்கு தெரிய வந்தது.

தன்னை முரளிதரன் ஏமாற்றிவிட்டதாக ஆத்திரம் அடைந்த ஓமனா அவரை பழிவாங்க நினைத்தார். அவருடன் ஊட்டி வந்து லாட்ஜில் தங்கிய ஓமனா முரளிதரனுக்கு விஷஊசி போட்டு தீர்த்துக் கட்டினார். உடலை மறைப்பதற்காக துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்தார். உடலை எடுத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு காரில் புறப்பட்டுள்ளார் ஓமனா. கடந்த 1996ம் ஆண்டு இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1996ல் கைதானார்

1996ல் கைதானார்

ஓமனாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கார் ஓட்டுநர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் டாக்டர் ஓமனாவை கைது செய்ததோடு வெட்டப்பட்ட முரளிதரன் உடலையும் போலீசார் கைப்பற்றினர். இந்த கொலை தொடர்பான வழக்கில் 2001ம் ஆண்டு ஊட்டி மாவட்ட நீதிமன்றம் ஓமனாவிற்கு ஜாமீன் வழங்கியது.

16 ஆண்டுகளாக தலைமறைவு

16 ஆண்டுகளாக தலைமறைவு

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓமனா போலி பாஸ்போர்ட்டில் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். கடந்த 16 ஆண்டுகளாக அவரைத் தேடும் படலம் நடைபெற்று வருகிறது. அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்காமல் இந்த வழக்கு கிடப்பிலேயே இருந்தது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் கேரள பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.

அடையாளம் கண்ட மக்கள்

அடையாளம் கண்ட மக்கள்

அதில் மலேசியாவின் புறநகர்ப்பகுதியான சுபங் ஜெய செலங்கோர் என்ற பகுதியில் இந்தப் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தூதரகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை பார்த்து கேரள மக்கள் இது டாக்டர் ஓமனா என்று அடையாளம் கண்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் மரணம்

மலேசியாவில் மரணம்

கடந்த 16 ஆண்டுகளாக டாக்டர் ஓமனா பற்றி விவரம் தெரியாமல் இருந்த நிலையில் அவர் தற்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். ஆனால் மலேசியாவில் பிணமாகவே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+