மாப்பிள்ளை கண் முன்னாடியே.. கல்யாண பெண்ணுக்கு நச்சுன்னு "முத்தம்" கொடுத்த குடிகாரன்.. ஒரே பரபரப்பு!
மணமேடையில் கல்யாண பெண்ணுக்கு முத்தம் தந்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது
கரீம்நகர்: தெலங்கானாவில் ஒரு கல்யாண வீட்டில் அக்கப்போர் அரங்கேறியுள்ளது. கல்யாணத்துக்கு வந்த மணப்பெண்ணின் தோழன் , குடிபோதையில் புதுப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டான். பிறகென்ன மண வீடு கலாட்டா வீடாகி விட்டது.
கரீம் நகர் மாவட்டத்தில்தான் இந்தக் கூத்து.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் பெரும் கலவரமே நடந்து முடிந்து விட்டது.. எல்லாத்துக்கும் காரணம் அந்த தம்மாத்துண்டு முத்தம். அந்த உதட்டை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம் அந்த நபர்.. மாறாக உணர்ச்சி வசப்பட்டு முத்தம் கொடுக்கப் போய் மொத்த வீடும் ரணகளமாகி விட்டது.

கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது ஹுஸுராபாத். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு ஏற்பாடுகள் ஜரூராய் நடக்க மணப்பெண்ணும் கல்யாணத்திற்காக ஆசையுடன் தயாராகி வந்தார். திருமண நாளும் வந்தது. திருமணத்தன்று ஜானவாசம் விடுவார்களே.. அதாவது மணமகள் அழைப்பு.. அது நடந்தது. அப்பத்தான் ஒரு அக்கப்போர் குடிகாரன் ஒருவன் மூலமாக வந்தது.
மணப்பெண்ணை வேகமாக நெருங்கிய அந்த நபர் நாங்க காதலிக்கிறோம்., இவர் என்னோட காதலி.. எனக்கு கட்டி வைங்க என்று ஆவேசமாக கூறியபடி மணப்பெண்ணை இழுத்து வச்சு நச்சுன்னு முத்தம் கொடுத்தார். இதைப் பார்த்த அத்தனை பேரும் அப்படியே ஷாக்காகி விட்டனர். என்னடா இது கூத்து என்று அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். கல்யாண ஊர்வலமும் நின்றது.
ஆனால் அந்த குடிகாரன் மட்டும் அடங்குவதாக இல்லை.. "எனக்கு கட்டி வைங்க... இல்லாட்டி கொன்னுடுவேன்" என்று சத்தம் போட்டு கத்தி கலாட்டா செய்தபடி இருந்தான். கடந்த 8 வருஷமாக காதலிக்கிறோம் என்றும் அவன் கூறினான். எங்க காதலை பெண் வீட்டார் அங்கீகரிக்கலை. கட்டாய கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டாங்க என்றும் அவன் கூற கூற மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியில் மூழ்கிப் போனார்கள்.
பிறகென்ன போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி கலாட்டா செய்த அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நேரத்தில்தான் மணப்பெண் வாயைத் திறந்தார். "நாங்க காதலிப்பது உண்மைதான், நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க விரும்பறோம்" என்று கூறி விட போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கத்தில் மாப்பிள்ளை வீட்டார் திரும்பிச் சென்றனர். இப்போது அந்தப் பெண்ணை கொண்டு போய் ஹோமில் சேர்த்துள்ளனராம்... ஆக, ஒரே ஒரு முத்தத்தால் மொத்தமாக 3 தரப்பினரும் ஆளுக்கொரு திசையாக சிதறிப் போய் விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications