காஷ்மீரில் பாதுகாப்பு படை- தீவிரவாதிகள் இடையே கடும் சண்டை.. 1 போலீஸ், 1 ராணுவ வீரர் பலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும், மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும், மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் மொத்தம் 10000 பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்ட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ராணுவத்திற்கு குல்ஹாம் அருகில் இருக்கும் துரிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது.
இதனால் காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக தீவிரவாதிகளை பிடிக்கும் ஆபரேஷனில் இறங்கினார்கள். இந்த நிலையில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையின் போது, காஷ்மீர் பிரிவினைவாதிகள் பலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியும் தாக்கினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் பலியானார்கள்.
மூத்த போலீஸ் அதிகாரி அமன் தாக்குர், ராணுவ அதிகாரி ரன்வீர் சோவீர் ஆகியோர் இதில் பலியானார்கள். அதே சமயம் மூன்று தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டார்கள். இவர்கள் மூன்று பேரும் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications