திடீரென வீங்கிய தோல்.. சந்திரபாபு நாயுடுவுக்கு வந்த புதிய பிரச்சனை.. சிறையில் ஏசி மாட்டிய போலீசார்
அமராவதி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தோலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் இருக்கும் சிறை அறையில் ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் செயல்பட்டு வரும் தெலங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திர மாநில முதல்வராக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலின்போது இவரது கட்சி படுதோல்வியை அடைந்தது. இருப்பினும் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

அந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதோடு, அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். இதற்கிடையே தான் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்தன.
அதாவது திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் கடந்த மாதம் 9ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதாவது அதிக வெப்பம் காரணமாக அவரது தோலில் சிறிய வீக்கங்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜமகேந்திராவரம் அரசு மருத்துவமனையின் 5 டாக்டர்கள் குழு சந்திரபாபு நாயுடுவுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் ஏறி இறங்கும் ஈரப்பதம் உள்ளிட்டவற்றின் காரணமாக சந்திரபாபு நாயுடுவின் தோலில் அலர்ஜி வீக்கங்கள் உருவானது தெரியவந்தது.
இதுபற்றி டாக்டர் மார்க்கண்டேயுலு கூறுகையில், ‛‛சந்திரபாபு நாயுடுவின் உடல்நலம் நன்றாக உள்ளது. ஆனால் தோலில் பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு குளிர்ச்சியான சூழல் வேண்டும். இதனால் குளிர்ச்சி சூழலை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளோம்'' என்றார். மேலும் இந்த பரிசோதனையின்போது சில மருந்துகளை முறையாக எடுத்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தனது குடும்ப டாக்டரிடம் கேட்டபிறகு தான் மருந்துகளை எடுத்து கொள்ள முடியும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் டாக்டர்கள் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏசி வசதி செய்து கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஏசி பொருத்தப்பட்டால் அவரது தோல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் சந்திரபாபு நாயுடு இருக்கு சிறை அறையில் ஏசி பொருத்த உத்தரவிட்டது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் சிறை அறையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதாக சிறை எஸ்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சிறைத்துறை டிஐஜி ரவி கிரண் கூறுகையில், ‛‛சந்திரபாபு நாயடுவின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சிறையிலேயே டாக்டர்கள் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவுக்கு தினமும் 3 முறை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நலம் குறித்த எந்த தகவலும் இதுவரை மறைக்கப்படவில்லை. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications