சென்னை, மதுரை உள்ளிட்ட 45 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை தொடக்கம்
டெல்லி: தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் 45 ரயில் நிலையங்களில் மாதிரி இ-கேட்டரிங் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2015-2016 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இ-கேட்டரிங் சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக 28 ரயில்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில் பயணிகள் தங்களுக்கு விரும்பிய உணவை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இ-கேட்டரிங் சேவை தற்போது 1,516 ரயில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்குத் தேவைப்படும் உணவினை www.ecatering.irctc.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 139 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் மூலமும் முன்பதிவு செய்யலாம். மேலும், 0120-2383892-99 அல்லது 1800-1034-139 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் பதிவு செய்துகொள்ளலாம் என மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயணிகளிடையே இந்த திட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பினைப் பொருத்து இந்த திட்டம் தற்போது ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 45 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
