மிசோரமில் 2-வது நாளாக இன்றும் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.5 ஆக பதிவு
அய்ஸ்வால் (ஐஸ்வால்): வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்றும் 2-வது நாளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் மற்ரும் மிசோரம் மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு மிசோரம் மாநிலத்தில் மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. மிசோரமின் சம்பாய் பகுதியில் இது உணரப்பட்டது.
இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இதனால் மிசோரமில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் வெளியாகவில்லை.

பிரதமர் மோடி பேச்சு
இதனிடையே மிசோரம் மாநில முதல்வர் ஜோரம்தங்காவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி அப்போது உறுதியளித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications