திடீரென அதிர்ந்த காஷ்மீர், லடாக்.. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.. அச்சத்தில் உறைந்த மக்கள்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின், காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் நேற்று லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கிஸ்துவார் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல் நேற்று மாலையும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் பகுதியில் கார்கில் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்து வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆக பதிவானது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications