"மாட்டுக்கறி நிறைய சாப்பிடுங்க".. பாஜக அமைச்சரின் திடீர் பேச்சு.. அப்படியே வியந்து பார்த்த மக்கள்..!
மாட்டுக்கறி சாப்பிட சொல்கிறார் அசாம் மாநில பாஜக அமைச்சர்
டிஸ்பூர்: "மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்" என்று பாஜக அமைச்சரே தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது..!
மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமில், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்..
புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கின்றனர்.. அதாவது, 126 சட்டமன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்கி வருகிறார்கள்.

அஸ்ஸாம்
இந்த மாநிலத்தில், ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக இருக்கிறார்.. வடகிழக்கு ஜனநாயக கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் இந்த பிஸ்வா சர்மாதான்... 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் சரி, 2019 எம்பி தேர்தலிலும் சரி, 2021 சட்டப்பேரவை தேர்தலும்சரி, அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியமான நபரே இவர்தான்..

பாஜக
இவர் மட்டும் இல்லாவிட்டால் அங்கு பாஜக காலூன்றி இருப்பது கஷ்டம்தான்.. பாஜகவுக்கு விசுவாசமாகவே இவர் பணியாற்றியதால்தான், முதல்வர் பதவி அவரை இந்த முறை தேடி வந்தது... முதல்வராக சர்மா பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடிகளை எடுத்து வருகிறார்.. அந்த வகையில், சமீபத்தில், புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.. மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு, சிறுபான்மை சமூக மக்களை மட்டும் குடும்ப கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்க சொன்னது பல்வேறு தரப்பில் விவாதங்களை கிளப்பியிருந்தது.

மாட்டிறைச்சி
இந்நிலையில், மாட்டுக்கறி விவகாரம் ஒன்று வெடித்துள்ளது.. பொதுவாக பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், அசாம் பாஜக அமைச்சர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருப்பவர் சன்போர் சுலாய்.. இவர் அங்கு கடந்த வாரம்தான் அமைச்சராகப் பதவி ஏற்றார்.

மாட்டிறைச்சி
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இவர் பேசும்போது "இந்தியா ஜனநாயக நாடு... ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விருப்பப்பட்டதை சாப்பிடுவதற்கு உரிமை உள்ளது... மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை விட, மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன்... மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.

மாடுகள்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்பி வைப்பதால், புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று பேசுவேன்... இப்படிப் பேசுவதால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் இல்லை. நம்முடைய மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது... மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை உள்ளது.. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம்...

மனைவி, மகள்
எதிரிகள் நம்முடைய வீட்டை தாக்கினால், உங்கள் குடும்பத்திலுள்ள மனைவி, மகள், குழந்தைகளை தாக்கினால், சுய பாதுகாப்புக்கு பதிலுக்கு நீங்களும் அவங்களை தாக்கலாம்.... அப்படித்தான் நாங்கள் எங்கள் எல்லையில் அசாம் போலீஸாருடன் மோதினோம்... இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருக்கிறது. இதை விரைவில் தீர்க்க வேண்டும்... பல கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் எல்லை பிரச்னையை தீர்த்து விடுவோம் என வாக்குறுதியளித்து, யாரும் அதை செய்யவில்லை. 50 ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்கவில்லை.. என்று கூறினார் .
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக்












Click it and Unblock the Notifications