மிசோரம் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்- முன்னதாகவே நடக்கிறது!

டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு கடந்த 4-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி மிசோரம் சட்டசபை தேர்தல் டிசம்பர் 4-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மிசோரம் மாநிலம் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் ஆகும். இங்குள்ள புகழ்பெற்ற பிரெஸ்பிடே ரியன் சபையின் மாநில அளவிலான மாநாடு டிசம்பர் முதல் வாரத்தில் ஐஸ்வாலில் நடக்கிறது. எனவே தேர்தல் தேதியை மாற்றியமைக்கும்படி அங்குள்ள அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 8-ந்தேதி கிறிஸ்தவர்களின் புனித நாள் என்பதால் அதையும் மாற்றி அமைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த மாநில தேர்தல் தேதி நவம்பர் 25-ந்தேதியாகவும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ந்தேதியாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.
மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் 8-ந்தேதி ஆகும். 9-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு இறுதிநாள் 11-ந்தேதி ஆகும். தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதி மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications