ஜம்மு காஷ்மீர்,ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு! 5 கட்டமாக நவ.25- டிச.2 வரை வாக்குப் பதிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25-ந் தேதி முதல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் 87, ஜார்க்கண்ட்டில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் முறையே ஜனவரி 19, ஜனவரி 3-ந் தேதி முடிவடைவதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 72.25 லட்சம் வாக்காளர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 10,015 வாக்குச் சாவடிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24,648 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
இரு மாநிலங்களிலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா முறை வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெறும். இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.
இவற்றுடன் டெல்லியில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 25-ந் தே, 2வது கட்டம்- டிசம்பர் 2; 3வது கட்டம்- டிசம்பர் 9; 4வது கட்டம்- டிசம்பர் 14; 5வது கட்டம்- டிச. 20-ந் தேதி என வாக்குப் பதிவு நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப் பதிவான நவம்பர் 25-ந் தேதியே டெல்லியின் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும்.
இரு மாநிலங்கள் மற்றும் டெல்லி இடைத்தேர்தல் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications