மோடிக்கு உதவிய தலைமை தேர்தல் ஆணையர்.. 'நேர ஆதாரம்' காட்டும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர், தனது பிரஸ்மீட்டை கூட பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்காக தள்ளி வைத்தார் என்று பகீர் குற்றச் சாட்டை காங்கிரஸ் சுமத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

திடீர் ஒத்திவைப்பு

திடீர் ஒத்திவைப்பு

ஆனால் இந்த செய்தியாளர் சந்திப்பில் தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. பகல் 12.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் அலுவலகம் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி இருந்தது. ஆனால் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பு 3 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அப்போதுதான் தலைமை தேர்தல் ஆணையர் பிரஸ்மீட் செய்தார்.

மதியம் பிரச்சாரம்

மதியம் பிரச்சாரம்

நேற்று, ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மோடி மதியம் 1 மணிக்கு உரையாற்றிய நிலையில்தான், தலைமை தேர்தல் ஆணையரின் பிரஸ்மீட், மதியம் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரஸ் மீட் நேரம்

பிரஸ் மீட் நேரம்

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் பிரதீப் சுர்ஜவாலா, இதுகுறித்து கூறுகையில், தேர்தல் ஆணையம் மதியம் 12.30 மணிக்கு பிரஸ்மீட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அது மதியம் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தானில் மோடி

ராஜஸ்தானில் மோடி

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும் என்பதால் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்ததை கருத்தில் கொண்டு எனது தேர்தல் ஆணையர் தனது அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு என்று நம்பிக் கொண்டிருந்தோம். அப்படி இல்லை என்பதுபோல நடவடிக்கைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அரசே போர்

அரசே போர்

பாஜக ஆட்சி தங்கள் மக்கள் மீது போர் தொடுத்து கொண்டுள்ளது. அரசே மக்கள் மீது போர் தொடுக்கும் அநியாயம் இந்த அரசில் தான் நடந்து வருகிறது. அத்தனை தூரம் மற்றும் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+