கொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு
கொல்கத்தாவின் ஒரே ஒரு வாக்குவாவடியில் நாளை மறுவாக்கு பதிவு நடக்க உள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது.

அந்த சமயத்தில் பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் பபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதுடன், அவருடன் சென்ற வாகனங்களும் தாக்கப்பட்டன. மேலும் ராகுல் சின்ஹா, நிலஞ்சன் ராய், அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications