சட்டசபைத் தேர்தல் பணி... 2 நாள் பயணமாக மகாராஷ்டிரா செல்கிறது தேர்தல் ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: விரைவில் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, தேர்தல் பணி தொடர்பாக நேரில் ஆலோசிக்க தேர்தல் ஆணைய அலுவலர்கள் அம்மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கின்றனர்.

288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிர மாநில சட்ட சபைக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே, அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

EC team to visit Maharashtra today ahead of Assembly polls

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்றும், நாளையும் என இரண்டு நாள் பயணம் செல்ல தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, சைடி ஆகியோர் மகாராஷ்டிரா செல்கின்றனர்.

அங்கு, மாநில அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது பற்றி அப்போது பேசப்படும் எனத் தெரிகிறது.

மேலும், அங்குள்ள வாக்காளர் பட்டியல் குறித்த கணக்கெடுப்பு சம்பந்தமாகவும் இப்பயணம் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+