ஆண் குழந்தை பிறக்கும் வரை இந்தியர்கள் சும்மா இருப்பதில்லையாம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் சுவாரசியம்
டெல்லி: இந்தியாவில் ஆண் குழந்தைகள் மீதான மோகம் தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள்ளது என்றும், எனவே ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதாரம் மட்டுமின்றி சமூக காரணிகள் குறித்தும் இதில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரி வரம்புக்குள் வந்த மேலும் பலர்
சரக்கு மற்றும் சேவை வரியால் இந்திய பொருளாராம் வளர்ந்துள்ளது. மறைமுக வரியளிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறு வணிகர்கள் தானாக முன்வந்து பதிவு செய்வது அதிகரித்துள்ளது. 2016 நவம்பர் முதல் இதுவரை கூடுதலாக 18 லட்சம் தனிநபர் வருமான வரி செலுத்துவோர் வரி வரம்புக்குள் வந்துள்ளனர்.

ஏற்றுமதி
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மாநிலங்கள் மேற்கொள்ளும் சர்வதேச ஏற்றுமதி கணக்கும் பொருளாதார அறிக்கையில் சேர்ந்துள்ளது. ஏற்றுமதி சிறப்பாக உள்ள மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரமும் சிறப்பாக இருக்கிறது. பிற மாநிலங்கள், பிற நாடுகளுடன் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் வசதி வாய்ப்புள்ள மாநிலங்களாக உள்ளனன.

ஆண் குழந்தைகள் வேண்டும்
ஆய்வறிக்கை கண்டறிந்த மற்றொரு முக்கியமான விஷயம், இந்திய சமூகம் ஆண் குழந்தைகள் மீது மிகுந்த மோகம் கொண்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், ஆண் குழந்தைகள் பிறக்கும்வரை பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு பிறகு பெரும்பாலானோருக்கு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

பெண்கள் வாழ்க்கைத்தரம்
அதேநேரம், கடந்த பத்தாண்டுகளில் சுயமாக சம்பாதிக்கும் பெண்களின் விகிதம் மாற்றமின்றியே உள்ளது. 2005-06 முதல் 2015-16க்கு நடுவேயான காலகட்டத்தில், கூடுதலாக 13 சதவீதம் பெண்கள்தான் கல்வியறிவு பெற்றுள்ளனர். பெண்களின் கல்வியறிவு 59.4 என்ற சதவீதத்தில் இருந்து தற்போது 72.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மழை குறைவு
விவசாய உற்பத்தி குறைந்ததற்கு, மாறுபடும் தட்பவெப்பமே காரணம். வெப்பமயமாதல் அதிகரிப்பு, மழை பொழிவு குறைவு போன்றவற்றால், விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. நீர்ப்பாசன வசதி செய்யப்படாத இடங்களை ஒப்பிட்டால், நீர்ப்பாசனம் உள்ள இடங்களில், இரண்டு மடங்கு அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications