கார்த்தி சிதம்பரத்தின் பண பரிவர்த்தனை குறித்து 14 நாடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பண பரிவர்த்தனை தொடர்பாக 14 நாடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுவதற்கு முன்பு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதை வாங்கி ஆதாயமடைந்தார் என்பது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்கள், அவரது நண்பர்களின் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் செய்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும், வணிக தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதை அடிப்படையாக வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அந்த நாடுகளில் இவருக்கு உள்ள வணிக தொடர்புகள் குறித்து தகவல்களை பெற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதற்காக இந்த 14 நாடுகளுக்கும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications