அரசியலுக்கு வருவதாக அறிவித்த சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா-வீட்டுக் கதவை தட்டிய அமலாக்கத்துறை!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் மருமகனும் வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நில முறைகேடு வழக்கி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் எம்பி ராபர்ட் வதேரா. ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ராபர்ட் வதேரா. இவர் மீது ஏற்கன்வே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நானும் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பினால் அரசியலுக்கு வருவேன். என் குடும்பத்தினர் அனைவரது ஆசீர்வாதத்துடன் அரசியலுக்கு உறுதியாக வருவேன் என ராபர்ட் வதேரா தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ராபர்ட் வதேராவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் பகுதில் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ7.5 கோடிக்கு வாங்கிய ரூ58 கோடிக்கு விற்பனை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications