சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரை மலம் தின்ன வைத்த அக்கிரமக்காரர்கள்!
பெர்ஹாம்பூர், ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் சூனியம் வைப்பவர்கள் என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேரை கட்டாயப்படுத்தி மனித மலம் தின்ன வைத்து ஒரு கும்பல் அட்டகாசம் செய்துள்ளது.
ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஒலப்பூர் என்ற கிராமத்தில் ஜனவரி 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மலம் உண்ண வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு மொட்டை அடித்துள்ளனர். பற்களையும் பிடுங்கி கொடூரமாக நடந்து கொண்டுள்ளது இந்தக் கும்பல்.

இதுகுறித்து பெர்ஹாம்பூர் காவல்துறை அதிகாரி சிகிதி நாயக் கூறுகையில், ஜனவரி 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றுதான் புகார் கொடுத்தார். அதன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளோம். அதில் ஒருவர் கிராம வார்டு உறுப்பினர் ஆவார். மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
பாதிக்கப்பட்ட பலர் அந்த சம்பவத்திற்குப் பின்னர் உயிருக்குப் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications