நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மலைப்பாதையில் இருந்து பஸ் கவிழ்ந்து கோர விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்டுள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது.

கோர விபத்து
ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள பிரபல மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர்.இன்று இரவு அனந்தகிரி கிராமம் அருகே பஸ் சென்றபோது, ஒரு வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் இருந்து 80 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

மீட்பு பணி தீவிரம்
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்தவர்க்ள இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

8 பேர் பலி
இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.

அதிகாரிகள் விரைந்தனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஷ் அதிகாரிகள், கலெக்டர், நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைத்துள்ளனர்.விபத்துக்குள்ளான பஸ் ஹைதராபாத்தின் தினேஷ் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் ஆகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications