இறுதியில் தேர்தல் ஆணையமும்.. பாஜக வீழ்த்திய அரசியலமைப்பு நிறுவனங்களின் பட்டியலில்: காங்கிரஸ் தாக்கு!
டெல்லி: வீழ்ச்சியடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனங்களில் தேர்தல் ஆணையமும் ஒன்றாக இருக்கும் என தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று (மார்ச் 9) ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் கோயல் ராஜினாமா: அருண் கோயல் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், உடனடியாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் அதே ஆண்டு நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு மறு நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகி இருந்தது. தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அருண் கோயல் விலகியிருப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதாவது வரும் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கார்கே காட்டம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா? (Election Commission or Election OMISSION?) இந்தியாவில் இப்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார், அதுவும் இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில். ஏன்? நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திர அமைப்புகளின் திட்டமிட்ட அழிவைத் தடுக்காவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்.
இப்போது வீழ்ச்சியடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனங்களில் தேர்தல் ஆணையமும் ஒன்றாக இருக்கும். தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களையும் திறம்பட வழங்கியுள்ள நிலையில், ஒரு தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவடைந்து 23 நாட்கள் ஆகியும் புதிய தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும். நியாயமான விளக்கத்தை சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
வேணுகோபால் தாக்கு: மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் ஆணையர் அருண் கோயல், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ராஜினாமா செய்திருப்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து மிகவும் கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அரசியலமைப்பு நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
2019 லோக்சபா தேர்தலின் போது, மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்ததற்கு எதிராக அசோக் லவாசா கருத்து வேறுபாடு தெரிவித்தார். தொடர்ந்து அவர் இடைவிடாத விசாரணைகளை எதிர்கொண்டார். இந்த அணுகுமுறை ஜனநாயக மரபுகளை அழிப்பதில் ஆட்சி நரகத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது விளக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் எல்லா நேரங்களிலும் முற்றிலும் கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும்" என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications