மதுசூதனனால் ஓ.பி.எஸ் அணிக்கு பின்னடைவு.. மாற்றி, மாற்றி பேசுவதாக சீறிய தேர்தல் ஆணையம்
டெல்லி: மாற்றி, மாற்றி பேசுவதாக ஓ.பி.எஸ் தரப்பு மூத்த அதிமுக நிர்வாகியான மதுசூதனனுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது மத்திய தேர்தல் ஆணையம்.
தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி முன்னிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாத-விவாதங்கள் நடந்து வருகின்றது.
உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த வாதத்தின்போது, மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் சரமாரி கேள்விகளை முன் வைத்தது.

முரண்பட்ட தகவல்
சசி நியமனம் குறித்து முரண்பட்ட தகவல்களை தந்தது ஏன்? தேர்தல் ஆணையத்திலும், உயர்நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை அவர் கொடுத்துள்ளார் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

ஹைகோர்ட்டில் கூறியது
சசிகலா அணியில் இருந்தபோது அவரை ஆதரித்து, விதிகளுக்கு உட்படே சசிகலா நியமனம் செய்யப்பட்டார் என மதுசூதனன் சென்னை ஹைகோர்ட்டில் கூறியிருந்தார். ஒவ்வொரு உறுப்பினரையும் கேட்டு பொதுச்செயலரை நியமிக்க கட்சியில் விதி இல்லை என்றும், நிர்வாகிகளின் கருத்து அடிப்படையில் பொதுச்செயலர் தேர்வு செய்யப்படலாம் என்றும், மதுசூதனன் கூறியிருந்தார். இப்போது அவர் சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளார்.

தப்பை உணர்ந்துவிட்டார்
இதைத்தான் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி கேட்டது. ஆனால், மதுசூதனனுக்கு முன்பு சட்ட நிபுணர் குழு தவறாக வழிகாட்டிவிட்டதாகவும், இதை உணர்ந்துதான், அவர் சசிகலா அணியிலிருந்து வெளியேறினார் எனவும், ஓ.பி.எஸ் தரப்பில் விளக்கம் கூறினர்.
ஆவணங்களில் சந்தேகம்
இருப்பினும், தனக்கு அதிகப்படியானோர் ஆதரவு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய தகவல்கள், ஆவணங்களில் தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த கேள்விகளை தேர்தல் ஆணையம் எழுப்பியது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் ஜோடிக்கப்பட்டது என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications