அடேங்கப்பா.. தேர்தல் வெற்றிக்கு உதவிய சுனில்! சித்தராமையாவின் “கிப்ட்” - அமைச்சர் அந்தஸ்துடன் பதவி
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனிலை முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம் செய்து இருக்கிறார் முதலமைச்சர் சித்தராமையா.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர்.
காங்கிரஸ் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற பலரை காரணமாக சொல்லலாம்.

இவர்களைபோல் கர்நாடக தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் சுனில். பிரசாந்த் கிஷோரை போன்றே தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வந்த பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் வியூகங்களை வகுக்க இவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் அதிமுக தோல்வியடைந்தாலும், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார் சுனில் கனுகோலு.
மைண்ட் ஷேர் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இதற்கு முன்பாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூக வகுப்பாளராகவும் சுனில் பணியாற்றியுள்ளார். பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றி வந்த சுனில், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து கொடுத்தவராவார்.
இந்த நிலையில் விரைவில் இவர் காங்கிரஸ் கட்சியிலும் இணையலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று தான் மீண்டும் முதலமைச்சராக காரணமாக சுனிலுக்கு மிகப்பெரிய பரிசை அளித்து இருக்கிறார். தேர்தலில் வேட்பாளராக சுனிலுடன் பயணித்த சித்தராமையா, முதலமைச்சராகவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பி உள்ளார்.
ஆம், முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக சுனிலை நியமனம் செய்து இருக்கிறார் சித்தராமையா. மாநில கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்துடன் சுனிலை தன்னுடைய ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார். கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த சுனில், சென்னையிலேயே தங்கி வருகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications