பா.ஜ.க.வுக்கு ரூ.41 கோடி... காங்கிரசுக்கு ரூ.36 கோடி... இது கடந்தாண்டு கட்சிகளின் நன்கொடை "மகசூல்"!
டெல்லி: கடந்த ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு 41 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு 36 கோடி ரூபாயும் பார்தி குழுமத்தின் டிரஸ்ட் மூலமாக நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
இதை பார்தி குழுமத்தைச் சேர்ந்த சத்யா தேர்தல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் அது தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
இது கடந்த 2013-14ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள் குறித்து அறிக்கை ஒன்றை தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியுள்ளதாவது:-
சத்யா தேர்தல் அறக்கட்டளை...
தேர்தல் கமிஷன் தேர்தல் நன்கொடைகள் தொடர்பாக அடையாளம் கண்டுள்ள ஏழு அறக்கட்டளைகளில் ஒன்று சத்யா தேர்தல் அறக்கட்டளை. வரி விலக்கு பெறுவதற்காக எங்கள் அமைப்பு மத்திய நேர்முக வரிகள் வாரியத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மொத்த நன்கொடை...
எங்கள் அறக்கட்டளைக்கு கடந்த நிதியாண்டில், நன்கொடையாளர்களிடம் இருந்து 85 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதில், பா.ஜ.,க்கு 41.37 கோடி ரூபாயும், காங்கிரஸுக்கு 36.50 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
மற்ற கட்சிகள்...
இதுதவிர, சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கு 2 கோடி ரூபாயும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஒரு கோடியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 4 கோடி ரூபாயும், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சிக்கு 50 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டது.
மீதி தொகை...
அரசியல் நோக்கங்களுக்காக எங்கள் அறக்கட்டளை 85 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளது. நன்கொடையாக கிடைத்த மீதம் உள்ள தொகையானது அறக்கட்டளையின் நிர்வாக செலவுகளுக்கும், இதர செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
வங்கி பரிமாற்றம்...
எங்கள் அறக்கட்டளைக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் (28 கோடி ரூபாய்), ஜூபிளியன்ட் லைப் சயின்சஸ் லிமிடெட் (3.88 கோடி), பார்தி இன்பிராடெல் லிமிடெட் (6 கோடி), இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (4 கோடி), டி.சி.எம்., ஸ்ரீராம் லிமிடெட் (2 கோடி), ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் (11 கோடி), டி.எல்.எப்., லிமிடெட் (20 கோடி) உட்பட, 18 நிறுவனங் கள் நன்கொடை வழங்கின.
காசோலைகள், வங்கி பரிமாற்றங்கள்...
நன்கொடைகள் எல்லாமே காசோலைகள் மூலமாகவும், வங்கி பரிமாற்றங்கள் மூலமாகவுமே பெறப்பட்டன' என இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications