சபரிமலை: பாகனை மிதித்து கொன்ற மதம் பிடித்த யானை
சபரிமலை: சபரிமலை அருகே மதம் பிடித்த யானை ஒன்று பாசமாக பழகிய பாகனை மிதித்து துவம்சம் செய்து கொன்றது. யானையின் அட்டகாசத்தை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓடினர்.
சபரிமலையை அடுத்த பம்பை எரிமேலியைச் சேர்ந்தவர் சலீம். இவர் மீரா என்ற யானையை வளர்த்து வந்தார். இதற்கு கொல்லத்தை சேர்ந்த மது உள்பட 2 பேர் பாகன்களாக இருந்தனர்.
திங்கட்கிழமையன்று ஒரு பாகன் யானையை அருகில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றார். வழியில் திடீரென யானைக்கு மதம் பிடித்தது. தகவல் அறிந்து இன்னொரு பாகன் மது விரைந்து வந்தார். அவர் யானையை அடக்க முயன்றார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த யானை, பாகன் மதுவை தும்பிக்கையால் சுற்றி வளைத்து தரையில் அடித்தது. அதன்பிறகும் ஆத்திரம் தணியாமல் காலால் ஓங்கி மிதித்தது.
யானையின் இந்த செயல்பாட்டினைக் கண்ட ஊர் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த வன அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு யானை மயங்கி சாய்ந்தது. அதன்பிறகே யானையின் பிடியில் இருந்த பாகன் மதுவை மீட்டு கோட்டக்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாகன் மது இறந்து போனார். இதுபற்றி கோட்டக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications