For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிசோரம் கல்குவாரி மலை சரிந்து விபத்து: 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

Google Oneindia Tamil News

ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி குன்று இடிந்து விழுந்ததில் சிக்கிய 15 பீகார் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடகிழக்கு மாநில கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். பொதுவாக பழங்குடி மக்களாகிய அவர்கள், மலைகளை தெய்வமாக வணங்குபவர்; இயற்கையை தெய்வமாக வணங்குபவர்கள்.

Eleven bodies recovered from stone quarry collapse site in Mizoram

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்படுகின்றன. உள்ளூராட்சியில் தன்னாட்சி, தனிமாநிலம் கோருதம், தனிநாடு கோருதல் ஆகியவற்றுக்காக இவர்கள் ஆயுதம் ஏந்தி உள்ளனர். அண்மைக்காலமாக இத்தகைய ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சில பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்கள், கல்குவாரிகளிடம் தனியாக வரி வசூலித்து அனுமதிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ராஜீவ் கொலையாளிகள் விடுதலை..திமுக கூட்டணியில் களேபரம்- காங். ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி! ராஜீவ் கொலையாளிகள் விடுதலை..திமுக கூட்டணியில் களேபரம்- காங். ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி!

மிசோரம் மாநிலத்திலும் இத்தகைய கல்குவாரிகள் அதிகம் உள்ளன. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பீகார் மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவுக்காக சென்றிருந்தனர்.

அதேநேரத்தில் பல தொழிலாளர்கள் கல்குவாரியின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்குவாரி மலை அப்படியே மொத்தமாக இடிந்து கீழே வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சமூக வலைதளங்களில் கல்குவாரி மலை அப்படியே சரிந்து மொத்தமாக கீழே விழும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே மிசோரம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை மொத்தம் 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary
Eleven bodies had recovered from stone quarry collapse site in Mizoram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X