உணர்ச்சி பொங்க நிதி அமைச்சகத்திற்கு குட்பை சொன்ன ப. சிதம்பரம்
டெல்லி: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து இன்று பிரியாவிடை பெற்றார்.
3 முறை மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதுவரை மொத்தம் 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஆனால் மொராஜி தேசாய் தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் சிதம்பரம் நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து இன்று பிரியாவிடை பெற்றார். அவர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் கடைசியாக பேசியபோது நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் சவால்களை பட்டியலிட்டார்.
அதிகாரிகள் மத்தியில் சிதம்பரம் பேசுகையில், 1966ம் ஆண்டு முதல் நான் தினமும் 16 மணிநேரம் வேலை பார்க்கிறேன். இனியும் அவ்வாறே பார்ப்பேன். இதுவரை பார்த்ததைவிட இனி என்னை பொது வாழ்வில் அதிகம் பார்ப்பீர்கள் என்றார்.
இது குறித்து சிதம்பரத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சிதம்பரம் அவரால் முடிந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டார். அவர் அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார் என்றார்.
இன்று காலை 8.15 மணிக்கு தனது அலுவலகத்திற்கு சென்ற சிதம்பரம் நிலுவையில் இருந்த கோப்புகளில் கையெழுத்திட்டார், கடைசி நாளான இன்று மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications