Work From Home-னு சொல்லிட்டு.. மனைவியுடன் தனியார் ஊழியர் சேர்ந்து செய்த செயல்.. புலம்பிய மேனேஜர்
டேராடூன்: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்து ஜாலியாக என்ஜாய் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை சில நாட்களில் கண்டுபிடித்த மேனேஜர் தற்போது புலம்பி தள்ளி உள்ளதோடு, அந்த ஊழியருக்கு 3 ஸ்டார் மட்டுமே வழங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி அந்த ஊழியர் என்ன செய்தார்? மேனேஜரின் கோபத்துக்கு என்ன காரணம்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கொரோனா பரவலின்போது ஐடி உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது. அதன்பிறகு இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகம் வரவழைத்துள்ளது.

இருப்பினும் ஆங்காங்கே சில நிறுவனங்கள் ஊழியர்களை இன்னும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்து வருகிறது. முக்கியமான மீட்டிங், முக்கிய புராஜெக்ட் என்றால் மட்டுமே அலுவலகம் வந்து பணியாற்ற வைக்கிறது.
வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்போது சில ஊழியர்கள் சரியாக வேலை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் அன்று முதல் இப்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில் ‛வொர்க் ப்ரம் ஹோம்' ஆப்ஷனை பயன்படுத்தி ஊழியர் ஒருவர் செய்த செயல் அவரது மேனேஜரை அதிர வைத்துள்ளது.
இதுபற்றி அந்த மேனேஜர் புலம்பி தள்ளி உள்ளார். இதுபற்றி அந்த மேனேஜர், ‛ரெடிட்' தளத்தில் கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டியதேவை இல்லை. வீட்டில் இருந்தும் பணியாற்றலாம். கிளனை்ட் விசிட் அல்லது முக்கியமான பணிகள் என்றால் மட்டுமே ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற வைப்போம்.
அதேவேளையில் Work From Home என்றாலும் கூட நிறுவனம் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் தங்களின் வீடுகளில் இருந்து தான் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம். ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக அதனை சரிசெய்வதற்காக தான் இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்.
ஆனால் ஒரு ஊழியர் முக்கியமான புராஜெக்ட்டின்போது வொர்க் ப்ரம் ஹோமில் இருப்பதாக கூறி சென்றவர் டேராடூனில் தனது மனைவியுடன் 1 மாதம் வரை தங்கினார். இது ஒன்றும் தவறு இல்லை கொடுக்கும் டாஸ்க்கை முடிக்கும் வரை.. ஆனால் அந்த ஊழியர் தங்கியிருந்த இடம் இணையதள வசதி குறைவான இடமாகும். அதோடு அடிக்கடி மின்சாரம் துண்டிப்பும் ஏற்பட்டது.
இதனால் ஒருநாளில் பலமணிநேரம் ஆப்லைன் செல்வதோடு, பணியை முடிக்காமல் இருந்தது. பல நாட்களுக்கு பிறகு இதுபற்றி அவரிடம் கேட்டேன். அப்போது அவர் தனது தவறை உணராமல் 5ஜி டாங்கிள், லேப்டாப்புக்கான பேக்அப் பேட்டரி வாங்கி தர வேண்டும் என்று சொல்கிறார். இதனால் அந்த ஊழியருக்கு வரும் ஆண்டில் 3 ஸ்டார் மட்டுமே வழங்க உள்ளேன்'' என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications