சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. 18 பேர் சுட்டுக்கொலை.. தலைக்கு ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டவரும் பலி
ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது. இந்த மோதலில் நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிகம் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக உள்ளது. நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில், நக்சலைட்டுகள் 18 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுகொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் மூத்த தலைவரும் அடங்குவார்.. தலைக்கு 25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்த சங்கர் ராவ் உள்பட 18 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரைபிள்ஸ் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஆப்ரேஷன் தொடங்கியதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக 2008 ஆம் ஆண்டு மாவட்ட ரிசர்வ் படை அமைக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில போலீசாரின் ஒரு பிரிவான இந்த ரிசர்வ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை பிரிவு இணைந்த பாதுகாப்பு படை குழு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளது. அப்போது கன்கேர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications