கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி!
பாட்னா: பீகாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமார் இப்போது ராஜ்யசபாவுக்கு செல்கிறார். இதன் மூலம் பீகாரில் நிதிஷ்குமாரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. மேலும், அங்குப் பல ஆண்டுகளாகவே பாஜக வளர தொடர்ந்து வளர்ந்து வரும் சூழலில், இப்போது அது நேரடியாக கண்ட்ரோலை எடுக்கிறது..
பீகார் அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு நீண்டகாலமாக முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் இன்று ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். 10 ஆண்டுகள் முதல்வர் என்ற அவரது சாதனையை இது முடிவுக்குக் கொண்டு வருகிறது.

மாறும் பவர்
மேலும், ஜேடியு, பாஜக இடையேயான அதிகார சமநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் கூட்டணியில் அதிக இடங்களை வைத்திருந்த ஜேடியுவின் இடங்கள் இப்போது சரிந்துவிட்டது. இதுவே இந்த அதிகார மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது.
சுமார் 20 ஆண்டுகளாக, நிதிஷ் குமார் பீகார் அரசியலின் பவர் ஹவுஸாக திகழ்ந்தார். ஜே.பி. இயக்கப் பின்னணியில் வந்த அவர், யாதவரல்லாத இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் குர்மி-கோரி வாக்காளர்களின் வலுவான வாக்கு வங்கியை உருவாக்கினார். "மகாதலித்", "மிகவும் பின்தங்கிய வகுப்புகள் (EBC)" வகைகளை உருவாக்கியது அவரது தேர்தல் வெற்றிக்குப் பெரியளவில் கை கொடுத்தது.
என்ன நடந்தது!
2010 சட்டசபைத் தேர்தலில் ஜேடியு 115 இடங்களை வென்ற நிலையில், பாஜக 91 இடங்களை வென்றன. இப்போது நிதிஷ் குமார் தான் பீகார் அரசியல் ரூல்ஸை தீர்மானிக்கும் தலைவராக இருந்தார். இதனால் அவர் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பீகாரில் பிரசாரம் செய்யக் கூட அனுமதிக்கவில்லை. , பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் தனது "மதச்சார்பற்ற" சோசலிசக் கொள்கைகளை நிதிஷ் நிலைநிறுத்தினார்.
2014ல் "மோடி அலை" அடித்த மாநிலங்களில் பீகாரும் ஒன்று! மோடி முன்னிறுத்தப்படுவதைக் கண்டித்து நிதிஷ் அந்த கூட்டணியில் இருந்து சில காலம் வெளியேறினார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பீகாரில் தனது பாஜக வலுவான கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியது. நிதிஷ் குமார் வளர்த்தெடுத்த இபிசி, மகாதலித் குழுக்களை அணுகிய பாஜக, அவர்களை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டது.
மாற்றம்
இதில் 2020 தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் தேர்தலில் பாஜக 74 இடங்களையும் ஜேடியு 43 இடங்களையும் வென்றது. அப்போது நிதிஷ் முதல்வர் பதவியில் தொடர்ந்தாலும் பாஜக தான் அதிக பவரை கொண்டு இருந்தது. இரு துணை முதலமைச்சர் பதவிகளையும் முக்கிய துறைகளையும் பாஜக தனதாக்கிக் கொண்டது. அது மெல்ல வளர்ந்தது.. பாஜக 89 இடங்களில் வென்ற நிலையில், ஜேடியு 85 இடங்களைப் பிடித்தது.
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக
இந்தச் சூழலில் தான் நிதிஷ் குமார் ராஜ்ய சபா பக்கம் செல்கிறார். இது பீகாரில் கிட்டத்தட்ட அவரது அரசியல் முடிவுரையாகவே பார்க்கப்படுகிறது. 75 வயதில், பத்து முறை முதலமைச்சராகப் பதவியேற்ற பின், அவர் பீகார் அரசியலில் இருந்து ஒதுங்குகிறார். அங்கு பாஜக ஆதிக்க மையமாக மாறியுள்ளது. பாஜகவில் இருந்து நேரடியாக ஒருவர் பீகாரில் முதல்வராகப் பதவியேற்பார். அதற்குப் பதிலாக நிதிஷின் மகன் நிஷாந்த் குமாருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications