ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Enforcement Directorate second time summons to P Chidambaram

இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கி இருக்கிறது.

நேற்று இந்த வழக்கில் முக்கியமான விசாரணை நடந்தது சுமார் 7 மணி நேரம் சிதம்பரம் விசாரிக்கப்பட்டார். ஆனால் மீண்டும அவர் வரும் 12ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால் 12ம் தேதி நடக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+