ஆட்சியை கவிழ்ப்போம்... தேர்தலில் ஜெயித்து நாங்களே ஆட்சியமைப்போம் - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்
Recommended Video

குடகு: எடப்பாடி பழனிச்சாமி செய்திருப்பது சதி மட்டுமல்ல, சசிகலாவுக்கு செய்த துரோகம் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் குடகு ரிசார்ட்ஸ்சில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாக சாடினார் டிடிவி தினகரன்.

ஊழல் ஆட்சி
இங்கே தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் கட்சியை காப்பாற்ற உறுதி பூண்டுள்ளனர். கட்சியை காப்பாற்ற தியாகம் செய்தவர்கள் இங்கே தங்கியுள்ளனர். ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார்.

துரோகிகள்
இங்கே உள்ள எம்.எல்.ஏக்கள் பதவிக்காக இல்லை. துரோகம் செய்த அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி செய்திருப்பது சதி மட்டுமல்ல, சசிகலாவுக்கு செய்த துரோகம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சசிகலாதான் பொதுச்செயலாளர்
சசிகலாவே பொதுச் செயலாளர் என்று பிரமாணப் பத்திரம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஏதோ புதிதாக ஒன்றை கூறி குழப்பி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் ஆட்சி தொடர காரணமானவர்

ஆட்சியை கவிழ்ப்போம்
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதே மக்கள் கோரிக்கை. ஆட்சி விரைவில் கவிழும். ஆட்சி கவிழ்ந்த பின்னர் தேர்தல் வரும் அந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்

பொதுக்குழு விரைவில் கூடும்
அதிமுக பொதுக்குழு விரைவில் கூடும். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அணிதான் ஓபிஎஸ் அணியுடன் இணைந்துள்ளது. 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications