ஒரு உயிர் கூட போக கூடாது.. காஷ்மீரில் 5 மாவட்டத்தில் இந்திய ராணுவம் எடுத்த அதிரடி முடிவு
ஜம்மு: பாகிஸ்தானில் எங்கும் தீவிரவாத முகாம்களை அழிக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் பல்வேறு தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாகிஸ்தான் வழக்கம் போல் எல்லையோரத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
மேலும் பீரங்கி மூலம் குண்டுகளையும் போட்டு வருகிறது. இதில் எல்லைப் பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் உயிரிழந்தனர். இதுவரை பாகிஸ்தானின் தாக்குதலுக்கு 18 பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 60 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த அத்துமீறலால் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்ற முடிவை இந்திய ராணுவம் எடுத்திருக்கிறது. அதன்படி இந்திய ராணுவம் மற்றும் மாநில அரசு இணைந்து பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் தாக்குதல் அபாயத்தில் உள்ள 5 மாவட்ட மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.
இந்த மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்காக ஜம்மு ,ராஜோரி மற்றும் சாம்பா ஆகிய இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அம் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் துணை முதலமைச்சர் சுரேந்தர் சவுத்ரி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் பொது மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பாதுகாப்பு முகாமில் செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் எந்தெந்த பகுதியில் தாக்குதல் அபாயம் இருக்கிறதோ அப்பகுதி மக்களை எல்லாம் விரைவில் அப்புறப்படுத்த உமர் அப்துல்லா உத்தரவிட்டிருக்கிறார்.
பாதுகாப்பு முகாமில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த தேச மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications