5 குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்து குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு... சிவசேனா அதிரடி அறிவிப்பு
ஆக்ரா : 5 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இந்துமத குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வீட்டிற்கு ஒரு குழந்தை பெற்றெடுத்தால் சன்மானம் என்ற நிலை மாறி 5 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு இந்துமத குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று வினோத அறிவிப்பை சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இந்த அதிரடி திட்டம் பற்றி ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வீணு லாவானியா கூறியதாவது...
இந்து மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் சரிந்து வருவது கவலை அளிக்கின்றது. எனவே வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், இந்தப் பரிசுத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் 2010-15-ம் ஆண்டு கால கட்டத்தில் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த இந்து குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்தப் பரிசுத்தொகையை பெற இந்து சமூக குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் வழங்கிய பிறப்பு சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வீணு லாவானியா தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதில் இந்துக்கள் வளர்ச்சி விகிதம் சரிந்தும். முஸ்லீம் மக்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்கு சிவசேனா கட்சியின் தலைமை கவலை தெரிவித்தது.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று சிவசேனா தலைமை அறிவுறுத்திய நிலையில், அக்கட்சியின் ஆக்ரா பிரிவு பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications