அனைவருக்கும் பயனளிக்கும் சிறப்பான பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் சிறப்பான வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

புதிய நடவடிக்கைகள், விதிமுறைகள், அமைப்புகள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றின் மூலம், ரயில்வே துறைக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் தொலைநோக்குத் திட்டத்தை ரயில்வே பட்ஜெட் வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மேலும் முன்னேற்றம் காண்போம்.
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இதுவரை தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்களில், பயணிகள் வசதிகளும், ரயில்களின் தரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
ஏழைகள் பயன்பெறும் வகையில் முன்பதிவு வசதியற்ற ரயில்கள் உள்பட புதிய வசதிகள் அறிமுகப்பட்டுள்ளது, அந்த்யோதயா விரைவு ரயில், தீனதயாளு ரயில் பெட்டிகள், ஏழைகளுக்கான எங்களின் பொறுப்புகளின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்தும் விதமாக மேகலாயத்தையும், மிசோரத்தையும் இணைக்கும் ரயில் சேவை மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications