திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு- சோனியா, ராகுலுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை
டெல்லி: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார். இதனால் திமுக தரப்பு 25 தொகுதிகளைத்தான் தர முன்வந்துள்ளதாம்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரோ, தேமுதிக வருவதாக இருந்ததால் 25 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருந்தோம். தற்போது அக்கட்சி தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. ஆகையால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரி வருகிறது.
இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், இன்று சோனியா, ராகுலை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்தும் இருவரிடமும் இளங்கோவன் விவரித்ததாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் குழு அமைப்பு
இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தனித்துப் போட்டி என்ற தவறான முடிவை விஜயகாந்த் ஏன் எடுத்தார் எனத் தெரியவில்லை; திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கான குழு விரைவில் அமைக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications