துப்பாக்கி முனையில் பெண் கவுன்சிலர் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய ஆண் கவுன்சிலர்!

Subscribe to Oneindia Tamil

அவுரங்காபாத்: பெண் கவுன்சிலரை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எம்ஐஎம் கவுன்சிலர் அதனை வீடியோ எடுத்தி மிரட்டியுள்ளார். பிம்ப்ரி சின்சிவாட் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குடும்பத்தோடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் எம்ஐஎம் கட்சியின் கவுன்சிலராக உள்ளவர் மாதின் ரஷித் சயீத். சக பெண் கவுன்சிலரை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார் என்பது இவர் மீதான புகாராகும். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பலமுறை மிரட்டி பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக பிம்ப்ரி சின்சிவாட் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கவுன்சிலர் புகார் அளித்தார்.

Ex Aurangabad Corporator rapes woman at gun point in Aurangabad

ரஷித் மட்டுமல்லாது அவரது சகோதரர், மைத்துனரும் தன்னை சீரழித்தனர் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பெண் கவுன்சிலர் அளித்த புகாரின் பேரில் ரஷித் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+