லிப்டுக்குள் சிக்கிக் கொண்ட மகாராஷ்டிர மாஜி முதல்வர்!
மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டு அரை மணி நேரம் தவித்தார். அவரை தீயணைப்புப் படையினர் வந்து மீட்டனர்.

தெற்கு மும்பையில், உள்ள ரவீந்திரா மேன்சன் என்ற இடத்தில் சவானின் அலுவலகம் உள்ளது. அங்கு செல்வதற்காக பிருத்விராஜ் சவானும், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்தும் சனிக்கிழமை மாலை வந்தனர். பின்னர் தரைத் தளத்திலிருந்து மேலே செல்வதற்காக லிப்ட்டில் ஏறியுள்ளனர்.
ஆனால் லிப்ட் கிளம்பி 5 நிமிடமாகியும் முதல் மாடிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சவானின் உதவியாளர் கஜானன் அவல்கர், கட்டட பாதுகாவலர்களை அழைத்தார். அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து லிப்ட்டுக்குள் சிக்கியிருந்த சவானையும், சஞ்சய் தத்தையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட இருவருக்கும் எதுவும் ஆகவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications