பாகிஸ்தான் மாஜி பிரதமர் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார்: ஹெட்லி திடுக் தகவல்
மும்பை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி, தனது வீட்டுக்கு வந்துள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயலுக்காக அமெரிக்காவில் கைது செய்த நிலையில், அந்த நாட்டில் இருந்தபடி மும்பை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம், வாக்குமூலம் அளித்து வருகிறார் டேவிட் ஹெட்லி.

இன்று அளித்த வாக்குமூலத்தில் டேவிட் ஹெட்லி அளித்த சில முக்கிய தகவல்கள்:
நான் லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்து செயல்படுவது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனது தந்தை, பாகிஸ்தான் ரேடியோவில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2008 டிசம்பரில் அவர் இறந்தார்.
அப்போது, எனது வீட்டுக்கு முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி வருகை தந்தார். 1971ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள எனது பள்ளி மீது குண்டுகளை வீசியது. அதில் பணியாற்றியவர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் இருந்து இந்தியா மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்தியாவை பழி வாங்க அப்போதே முடிவு செய்தேன். இவ்வாறு ஹெட்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications