"90 டிகிரி கொடூரம்".. குலை நடுங்க வைக்கும் தகவல்கள்.. கொல்கத்தா பெண் பலாத்காரம்.. Exclusive பின்னணி
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க சுதந்திர தின இரவுக்கு முன் பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சரி.. இந்த சம்பவத்தில் என்னதான்.. உண்மையில் கொல்கத்தா மக்கள் இடையே அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன? இது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே பேசினோம். நம்மிடம் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை தெரிவித்தனர்.
கொல்கத்தாவை சேர்ந்த பெங்காளி செய்தியாளர் ஷானு கோஷ் என்பவர்.. நேற்று போரட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், நம்மிடம் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த மருத்துவமனை தினமும் பல லட்சம் பேர் வரக்கூடிய மருத்துவமனை. இங்கே சர்வீஸ் சரியாக இருக்காது என்பதே பலரின் புகார். ஆனால் இலவச அரசு மருத்துவமனை என்பதால்.. இங்கே தினமும் பலர் வருவது வழக்கம்.
எல்லா மருத்துவ கல்லூரி போலவே இங்கேயும் அதீத பணி நேரம் சுமை இருக்கும். அப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான அந்த பெண் டாக்டர்.. அங்கே இரவு 2 மணி வரை வேலை பார்த்துள்ளார்.
அந்த 31 வயது பெண் தனது ஜூனியர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்கு சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்து உள்ளார். மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறை இல்லாததால், செமினார் ஹாலில் ஓய்வெடுப்பது பாதுகாப்பானது என்று கருதி அங்கேயே சென்று தூங்கி உள்ளார்.
ஆகஸ்ட் 9 அன்று இந்த சம்பவம் எல்லாம் நடந்து உள்ளது. அன்று காலை வகுப்பிற்கு வந்தவர்கள்.. அந்த கருத்தரங்கு அரங்கில் அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.
நம்மிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில், அந்த பெண் கொலை செய்யப்படும் கடுமையான பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரின் பெண் உறுப்பில் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது.
அங்கே உள்ளே மாணவர்கள் சந்தேகிப்பது.. ஒரு ஆள் செய்யவில்லை, அப்போது ஷிப்டில் இருந்த சிலரும் இதை செய்துள்ளனர். அந்த பெண் உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக கூறியுள்ளார். அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் என்று நம்மிடம் கூறி உள்ளனர்.
உடலில் பல காயங்கள் உள்ளன.. அந்த பெண்ணின் கண்ணாடி உடைந்து இரண்டு கண்களில் குத்தி உள்ளது. இதனால் கண்களில் ரத்தம் இருந்துள்ளது. காதுகளில் அடிக்கப்பட்ட நிலையில் அங்கேயும் ரத்தம் உள்ளது. உதடுகள் கிழிந்து ரத்தம் வந்துள்ளது. அந்த பெண்ணின்.. இரண்டு கால்களும் உடைந்து உள்ளன. 90 டிகிரிக்கு கால்களை கொண்டு செல்லும் அளவிற்கு உடைத்து உள்ளனர்.
இதெல்லாம் நடக்கும் போது அந்த பெண் கத்த கூடாது என்பதால் அந்த பெண்ணின் தொண்டையை உடைத்து உள்ளனர். அதேபோல் கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டு உடைக்கப்பட்டு உள்ளது. கால்கள் உடைக்கப்பட்ட போது, தலையின் பின்புறம் தாக்கப்பட்ட போது அந்த பெண் மரணம் அடைந்து உள்ளார்.
காலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இந்த சம்பவம் நடந்து உள்ளது. அதாவது பெண் தூங்க சென்ற 30 - 40 நிமிடங்களில் பின்னாடியே தொடர்ந்து சென்று இப்படி செய்துள்ளனர்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள். இவர் கைதான் நிலையில்.. குழு வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்கள் யார் யார்.. அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்குத்தான் இன்னமும் பதில் கிடைக்கவில்லை!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications