மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் உதவியுடன் பாஜக விஸ்வரூப பாய்ச்சல்? மமதாவுக்கு மரண அடியா?
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மோடி அலை வீசியபோதே கடந்த தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக இம்முறை டபுள் டிஜிட் இடங்களை பெற்று விஸ்வரூபம் எடுக்கும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது பெரும்பாலான ஊடகங்களின் கருத்து கணிப்புகள். தமிழகத்தில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக படுதோல்வியை சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கத்தில் இம்முறை டபுள் டிஜிட் இடங்களை அக்கட்சி பெற வாய்ப்புள்ளது என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். 2014 லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும் கூட மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் பாஜக வெல்ல முடிந்தது.

பாஜகவுக்கு இடதுசாரிகள் ஆதரவு?
ஆனால் இம்முறை அதிகபட்சமாக 23 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த இடதுசாரி கட்சிகள் முழு வீச்சில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்பட்டது. இடதுசாரிகளின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு சென்றிருந்தால்தான் இத்தகைய விஸ்வரூபத்தை அக்கட்சி வெளிப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. மேற்கு வங்கம் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்:

பாஜகவுக்கு 11 இடங்கள்
ரிபப்ளிக் - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 11 தொகுதிகள்; திரிணாமுல் காங்கிரஸுக்கு 29 தொகுதிகள் கிடைக்குமாம். டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸுக்கு 28; பாஜகவுக்கு 11 இடங்கள் கிடைக்குமாம்.

திரிணாமுலை வீழ்த்தும் பாஜக?
இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்து கணிப்பானது பாஜகவுக்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும் என்கிறது. திரிணாமுல் காங்கிரஸுக்கு 19 முதல் 22 இடங்கள்தான் கிடைக்குமாம். சிஎன்என் நியூஸ் 18- ஐபிஎஸ்ஓஎஸ் கருத்து கணிப்பில் பாஜகவுக்கு அதிகபட்சம் 5 இடங்களும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 38 இடங்களும் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸுக்கு பின்னடைவு?
ஏபிபி-ஏசி நீல்சன் முடிவுகளில் பாஜக-16; திரிணாமுல் 24; நியூஸ் 24- சாணக்கியா கருத்து கணிப்பில் பாஜக 18- திரிணாமுல் -23; ரிபப்ளிக் - ஜான்கிபாத் முடிவில் பாஜக 18 முதல் 26; திரிணாமுல் 13 முதல் 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் பாஜக 12; திரிணாமுல் 29 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications