கேரளாவில் கள்ளத் தொடர்பு குற்றங்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரிப்பு: சமூக நல வாரியம்
கன்னூர்: கேரளாவில் கள்ளத்தொர்புகள் அதிகரித்துள்ள நிலையில் இதை கட்டுப்படுத்த திருமணத்துக்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் கவுன்சலிங் அளிப்பது அவசியம் என்கிறார் அம்மாநில சமூக நல வாரியத்தின் பெண் தலைவரான கமருன்னிசா அன்வர்.
கன்னூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய கமருன்னிசா கூறியதாவது: 2013-14ம் ஆண்டுகளில் கேரளாவில் மொத்தம் 3,406 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 845 வழக்குகளும், எர்ணாகுளத்தில் 387 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் வழக்குகளும் திருவனந்தபுரத்தில் அதிகம் பதிவாகியுள்ளன.

இந்த வழக்குகளில் 672 வழக்குகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை. சமூக நல வாரியத்திடம் பதிவாகியுள்ள வழக்குகளில் கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்குகள் 16 சதவீதம் ஆகும். கள்ளத்தொடர்பு அதிகரிக்க சமூக வலைத்தளங்களும், செல்போன்களும் முக்கிய பங்காற்றுகின்றன. 61 சதவீத வழக்குகள் குடிபோதையில் கொடுமைப் படுத்துவது தொடர்பானதாக உள்ளன.
திருமணத்துக்கு பிந்தைய கள்ளத்தொடர்பு எண்ணிக்கை ஆபத்தான கட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட காலம் மாறிப்போய், சமீபத்தில் திருமணமான தம்பதிகள் கூட கள்ளத்தொடர்பில் சிக்கிக்கொள்வது அதிகரித்துள்ளது. இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்க திருமணத்துக்கு முன்பே, ஆணுக்கும், பெண்ணுக்கும் கவுன்சலிங் கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications