ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை 2–வது கட்ட வாக்குப்பதிவு!
ஸ்ரீநகர்/ ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் நாளை 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 87 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இந்த 2 மாநிலங்களிலும் 2-வது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இங்கு தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த 2 மாநிலங்களிலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
2-வது கட்டத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை பிரிவினைவாதியாக இருந்து தேசிய நீரோட்டத்துக்கு மாறிய சாஜத் லோனே போட்டியிடும் ஹந்த்வாரா தொகுதியும், உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெண் அமைச்சர் சகினா இட்டோ போட்டியிடும் நூராபாத் தொகுதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற இருக்கும் 18 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில போலீஸ் ஐ.ஜி. சுப்ரதா சானா தெரிவித்தார்.
வாக்குப் பதிவையொட்டி 248 கம்பெனிகள் கொண்ட ராணுவத்தினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். 18 தொகுதிகளிலும் மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 15 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள 20 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இந்த தொகுதிகளில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜூன் முண்டா, மதுகோடா உள்ளிட்ட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 பேர் பெண்கள். இங்கு மொத்தம் 44 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications