For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்? அதிர்ச்சியில் ஹரியானா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டிகர்: சாலையில் சென்ற வாகனங்களில் பயணித்த பெண்களை, ஜாட் போராட்டக்காரர்கள், இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து 50 கி.மீ தொலைவில் முர்தால் என்ற பகுதியில், பெண்கள் பலர் போராட்டத்தின் நடுவே பலாத்காரத்திற்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Eyewitness alleged rapes took place in Murthal during Jat stir

லாரி டிரைவர் ஒருவர், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுமார் 50 பெண்களை போராட்டக்காரர்கள், வயல் வெளிக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கார்களில் பயணித்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ளாடைகள் சிதறிக்கிடந்தன என்றார்.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலாத்காரம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும், பலாத்கார சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சோனிபட் மாவட்ட போலீஸ் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உள்ளாடைகளை கைப்பற்றி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

English summary
Dozens of women were dragged into a field near Murthal about 50 km from Delhi, a truck driver has said, among the first of witness accounts into allegations that women were gang-raped here a week ago, at the height of violence during Jat quota protests in Haryana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X